
அபிராமம் முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம் துவக்கம்..
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகா, அபிராமம் முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம் துவக்கவிழா, அபிராமம் ஆரம்பப்பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில், அபிராமம் முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி பொறுப்பு கழக துணைத் தலைவர் ஹாஜி எம்.ஏ. முகம்மது ஸித்தீக் தலைமையேற்றார்.
அபிராமம் கல்வி பொறுப்பு கழக செயலாளர் இஞ்சினியர் ஜனாப் எஸ்.எஸ்.எஸ். அஷ்ரப் சுனைத், பொருளாளர் வி.எம். நவ்சாத் அலி, அபிராமம் ஆரம்பப்பள்ளி தாளாளர் வி.ஏ.பி. ஜாஹிர் உசேன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், அபிராமம் முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எம்.ஏ. உசேன், அபிராமம் ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் எம். நெய்னார் முகம்மது உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரைகள் வழங்கினர்.
மேலும், என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் ஏ.எஸ். மாலிக் அப்துல் நாசர், உதவி திட்ட அலுவலர் எஸ்.என். முகம்மது பாசித் ஆகியோர் முகாமின் நோக்கம் மற்றும் அதன் சமூகப்பயன்களை விளக்கினர்.
முகாமின் முதல்நாளில், என்.எஸ்.எஸ். மாணவர்கள் அனைவரும் இணைந்து அபிராமம் ஆரம்பப்பள்ளி வளாகம் முழுவதும் தூய்மை பணிகளில் ஈடுபட்டு, சுற்றுச்சூழல் சுத்தமாக்கல் மற்றும் சமூக சேவையின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தினர்.






