
பல்வேறு கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
காரியாபட்டி, செப்.22-
காரியாபட்டி ஒன்றியம் மல்லாங்கிணறு அருகே கோவில் பட்டி கிராமத்தில் தி.மு.க. மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்த வர்கள் அக்கட்சியில் இருந்து விலகி காரியாபட்டி அ.தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் தோப்பூர் முருகன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அப்போது மல்லாங்கிணறு நகர செயலாளர் அழகர்சாமி, மல்லாங்கிணறு முன்னாள் துணை சேர்மன் மணிராஜ், வார்டு செயலாளர் சின்ன முத் தையா,ராமமூர்த்திபோத்திராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.






