
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து நன்றி தெரிவித்தார் – மதுரை மேற்கு மாவட்ட தலைவர் கு. சிவலிங்கம்
மதுரை, செப். 19:
மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று மதுரை வந்திருந்தபோது, பாரதிய ஜனதா கட்சியின் மதுரை மேற்கு மாவட்டத் தலைவர் திரு. கு. சிவலிங்கம் அவர்கள் மரியாதையுடன் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, பல்வேறு அத்தியாவசிய பொருட்களுக்கும், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டிருப்பது குறித்து அவர் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார். “மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட இந்தத் தீர்மானம், மத்திய அரசின் மக்கள் நலத்தையும், நிதி அமைச்சரின் சமூக அக்கறையையும் வெளிப்படுத்துகிறது” என கு. சிவலிங்கம் தெரிவித்தார்.
மேலும், மதுரை மேற்கு மாவட்ட மக்கள் சார்பாக “கோடான கோடி நன்றிகளை” தெரிவித்துக் கொண்டதுடன்,
இந்நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.






