
உசிலம்பட்டியில் பேருந்து நிலையம் விரிவாக்க பணிக்காக கோவில் மரங்களை வெட்டுவதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் கடை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
உசிலம்பட்டி:
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பேருந்து நிலையம் உள்ளது., இந்த பேருந்து நிலையம் சுமார் 8 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பேருந்து நிலைய விரிவாக்கத்திற்காக பேருந்து நிலையம் பின்புறம் சந்தை பகுதியில் அமைந்துள்ள சித்திவிநாயகர் மற்றும் இரகாமன் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவில் சிலைகள் அகற்றுவதற்கு எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்த சூழலில் இந்த சிலைகளை அகற்றி மாற்று இடத்தில் வைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள சூழலில், சுமார் 50 ஆண்டுகள் பழமையான அரசமரம், வேப்பமரம் உள்ளன.
இவற்றை அகற்றுவதற்கு நகராட்சி நிர்வாகம் முன்வந்த நிலையில், இதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், 54 கடை வியாபாரிகள் ஒன்றிணைந்து மரங்களை வெட்டுவதற்கு நீதிமன்ற உத்தரவு உள்ளதா என, கேள்வி எழுப்பி எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், நீதிமன்ற உத்தரவு பெற்று மரங்களை அகற்ற போவதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்ததையடுத்து மரங்களை அகற்றும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு, உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்திலிருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






