March 3, 2026
கண்டன் ஆர்ப்பாட்டம் !

கண்டன் ஆர்ப்பாட்டம் !

உசிலம்பட்டி:

மதுரை, உசிலம்பட்டியில் பி.கே.மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் அமைக்கும் இடத்தை மாற்ற கோரி கள்ளர் பள்ளிகளின் முன்னாள் மாணவர்கள் சார்பில் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கண்டன் ஆர்ப்பாட்டம் !

தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 03.07.2025 தேதி 110 விதியின் கீழ் அகில இந்திய பார்வர்ட் ப்ளாக் கட்சியின் தலைவரும் 5 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் உசிலம்பட்டி,மேலநீதிநல்லூர்,கமுதி ஆகிய மூன்று இடங்களில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரிகளை கொண்டு வந்து வரும் மறைந்த பி.கே.மூக்கையா தேவருக்கு உசிலம்பட்டியில் மணிமண்டபம் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என, சட்டசபையில் அறிவித்திருந்த சூழலில், கடந்த 6 ந் தேதி பி.கே. மூக்கையா தேவரின் 46-வது நினைவு தினம் அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், உதவி ஆட்சியர் உட்கர்ஷ் குமார் தலைமையிலான அதிகாரிகளுடன் அமைச்சர்கள் எ. வ.வேலு, பி.மூர்த்தி உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.

அதனைத்தொடர்ந்து, மணிமண்டபம் அமைக்க முதற்கட்டமாக ஆறரை கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளன.

இந்நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள பழைய அரசு மேல்நிலைப்
பள்ளயில் மணிமண்டபம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு பழைய கட்டிடங்களை
இடிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் பி. கே.மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் அமைக்க கூடாது என,
வலியுறுத்தி, கள்ளர் பள்ளிகளின் முன்னாள் மாணவர்கள் சார்பில் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *