March 5, 2026
பாரத பிரதமர் மோடி பிறந்த தினம் - இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

பாரத பிரதமர் மோடி பிறந்த தினம் - இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

உசிலம்பட்டி:

மதுரை, உசிலம்பட்டியில், பாரத பிரதமர் மோடியின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு, பாஜக நிர்வாகிகள் சார்பில் திருமுருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

நாடு முழுவதும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பாஜக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி
வருகின்ற சூழலில், இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 75 -வது பிறந்த நாளை முன்னிட்டு, பாஜக கட்சியின் சார்பில் மாவட்டச் செயலாளர் தீபன் முத்தையா தலையில் கட்சி நிர்வாகிகள் உசிலம்பட்டி திருமுருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து, தேவர் சிலை முன்பு பாஜக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்பு
வழங்கி வாழ்க வாழ்கவே மோடி வாழ்கவே என, கோஷங்கள் எழுப்பி கொண்டாடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *