March 3, 2026
காரியாபட்டியில் விஸ்வ கர்மா ஐந்தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா - பேரணி !

காரியாபட்டியில் விஸ்வ கர்மா ஐந்தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா - பேரணி !

காரியாபட்டி, செப். 17 .

காரியாபட்டி யில், விஸ்வ கர்மா ஜெயந்தி விழா மற்றும் பேரணி நடை பெற்றது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி விஸ்வகர்ம ஐந்தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் விஸ்வகர்ம ஜெயந்தி விழா நடை பெற்றது.

விழாவிற்கு , கண்ணையா ஆசாரி தலைமை வகித்தார். அமுதா சரவணன். செந்தில் குமார், மூர்த்தி ராமகிரு ஷ்ணன், வேல்முருகன். ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், பேரூராட்சித்தலைவர் செந்தில் விழாவினை தொடங்கி வைத்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

விழாவில், காரியாபட்டி நலச்சங்கத் தலைவர் செந்தில், செயலாளர் மணி துணைத் தலைவர் சுப்பிரமணியம், சக்தி வேல் துணை செயலாளர் ஆனந்தகுமார் பொருளாளர் கதிரேசன் .உட்பட பலர். கலந்து கொண்ட னர்.

முன்னதாக, சங்க உறுப்பினர் களின் பேரணி நடை பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *