March 4, 2026
ரேஷன் அரிசி வீடு வீடாக சேகரித்து கடத்தல்.

ரேஷன் அரிசி வீடு வீடாக சேகரித்து கடத்தல்.

திருப்பூர் செப் 16,,

வீடு வீடாக சேகரித்து கடத்த முயன்ற ரேஷன் அரிசி மூட்டை, இருசக்கர வாகனம் பறிமுதல்

ரேஷன் அரிசி கடத்தல் வண்டியில் S.M.மளிகை என அரசியல் கட்சி வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளது.

ரேஷன் அரிசி கடத்தியது தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் ஆடியோவுடன் வெளியாகி பரப்பு.

புகாரளித்ததால் ரேசன் அரிசி மூட்டை, வண்டியை விட்டு விட்டு கடத்தியவர் ஓட்டம்.

ரேசன் அரிசி மூட்டை கடத்தலுக்கு பயன்படுத்திய வண்டியை வழங்கல் அலுவலர்கள் பறிமுதல்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட அனுப்பர்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட PN ரோடு போயம்பாளையம் JV, ஈஸ்வரி கம்பெனி பின்புறம் சாலையிலுள்ள வீடுகளில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி நம்பர் பிளேட் எண் இல்லாத வண்டியில் S.M மளிகை என எழுதப்பட்ட TN 42 AA 3206 என்ற TVS XL வண்டியில் ரேசன்கடை மூட்டை வண்டி அந்த வழியாக வந்த போது சமூக ஆர்வலராகிய ஈ.பி.அ.சரவணனிடம் ரேசன் அரிசி இருந்தால் பணம் கொடுத்து வாங்கி கொள்வதாக கூறியுள்ளனர்.

அப்போது ரேசன் அரிசி அரசு இலவசமாக வழங்கப்படுகின்றன ஏன் அதை பணம் கொடுத்து வாங்கீர்கள் என கேட்டபோது அரிசி கடத்திய நபர் ஒருவருக்கு போன் செய்து செல் 8124636716 என்ற எண்ணிற்கு போண் செய்து அவுட் ஸ்பிக்கரில் பேசினார் அப்போது அந்த நபர் ஈ.பி.அ.சரவணனிடம் பேசிய போது இந்த அரிசி வாங்கிய நபர் ரேசன் அரிசி வியாபாரி சேகர் என்பவருடையது தான் அவருடைய டைவர் உடனடியாக ரேசன் அரிசி கடத்திய வண்டியை விடு சொல்லினார் அப்போது சமூக ஆர்வலராகிய ஈ.பி.அ.சரவணன் பேசுவை தெரிந்தது கொண்ட நபர் இணைப்பை துண்டித்து விட்டார்.

பிறகு உடனடியாக இது தொட‌ர்பாக காவல் துறைக்கும் மாவட்ட வழங்கல் அலுவலருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் திடீரென ரேசன் அரிசி கடத்திய நபர் வண்டி ரேசன் அரிசி மூட்டைகள் அங்கையே போட்கு விட்டு ஓடி விட்டார்.

அதன் சம்பந்தப்பட்ட வடக்கு வட்ட குடிமைப்பொருள் தனி வட்டாசியர் கோவிந்தசாமி , வருவாய் ஆய்வாளர் ராகுல் ஆகியோர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்து ரேஷன் அரிசி மூட்டையும், வண்டியும் பறிமுதல் செய்தனர்.

, சில மாதங்களுக்கு முன்பு வரை திருப்பூரில் பல்வேறு இடங்களில் @லாரி, டெம்போ உள்ளிட்ட கனரக வாகனங்களில் ரேஷன் அரிசி கடத்தல் சம்பவம் அதிகமாக இருந்தது.

அதன்பின், அதிகாரிகளின் கெடுபிடியால் சமீப காலமாக சரக்கு ஆட்டோ, இருசக்கர வாகனங்களில் ரேஷன் அரிசி கடத்தல் சம்பவம் அதிகரித்தது. அதிலும், நகர் மற்றும் கிராமபுறங்களில் வீடு,வீடாக சென்று குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, கேரளாவுக்கு கடத்துவது அதிகமானது.

தற்போது மீண்டும் ரேஷன் அரிசி கடத்தல் சம்பவம் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, கடந்த சிலநாட்களாக, நகர் மற்றும் கிராமப்புறங்களில் சிவில்சப்ளை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும் ரேஷன் அரிசியை, பொதுமக்களிடம் குறிப்பிட்ட விலை கொடுத்து வாங்கி கடத்தும் கும்பல் குறித்து விசாரிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *