
திண்டுக்கல் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் இல்ல காதணி விழா :
திண்டுக்கல் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மேற்கு நகர துணைத் தலைவர் ரகு ராமச்சந்திரன் இல்ல காதணி விழா மதுரை சாலையில் உள்ள மதினா பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் சிறுபான்மையினர் பிரிவு மற்றும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம், திண்டுக்கல் நகர் மேற்கு தலைவர் கோபால், மரியபிரான்ஸ்சேவியர் சிறுபான்மை அணி மற்றும் கட்சி நிர்வாகிகள் காதணி விழாவில் கலந்து கொண்டு குழந்தைச் செல்வங்களான தியாஸ்ரீ, பிரகதி, கிஷாந்த் ஆகியோரை வாழ்த்தினார்கள்.






