
அரசின் அனுமதியின்றி, அரசு வாகனத்தை இயக்கிய போடிநாயக்கனூர் நகராட்சி ஆணையாளர் - நடவடிக்கை எடுத்திட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை !
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி ஆணையாளர் பார்கவி, கடந்த சில நாட்களுக்கு முன்னர், தமிழ்நாடு அரசின் ஜீப் (TN60 Q 5418) வாகனத்தை, விதி மீறலில், தனது சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தி, (சனி, ஞாயிறு) கேரளாவிற்கு சுற்றுலா சென்று வந்ததாகவும், தமிழ்நாடு மாநில எல்லையிலும், கேரளா மாநில எல்லையிலும் உள்ள செக்போஸ்ட்டுகளிலும் உள்ள சிசிடிவி கேமிராக்களிலும் பதிவாகி இருப்பதாகவும், தனது அரசு குடியிருப்பில், சொந்த வேலைக்காக, விதிமீறலில், ஒப்பந்த தூய்மைப் பணியாளர் இருவரை, சொந்த வேலைக்கு பயன்படுத்தி வருவதாகவும், தமிழ்நாடு நகராட்சித்துறை இயக்குநரும், தேனி மாவட்ட ஆட்சித்தலைவரும், விதிமீறலில், சொந்தப் பயன்பாட்டிற்கு, வெளிமாநிலத்திற்கு, கேரளாவிற்கு, அரசின் அனுமதியின்றி, அரசு வாகனத்தை இயக்கிய, போடிநாயக்கனூர் நகராட்சி ஆணையாளர் பார்கவி மீது, விரைவான, முறையான விசாரணைக்கு உத்தரவிட்டு, நடவடிக்கை எடுத்திட முன்வர வேண்டும் என்ற கோரிக்கையினை சமூக ஆர்வலர்கள் முன்வைக்கின்றனா்.

மேலும் அரசு குடியிருப்பில் சொந்த வேலைக்காக வைக்கப்பட்டிருக்கும், ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் இருவரையும் அப்பணியிலிருந்து, சொந்தப் பணியிலிருந்து, விடுவித்து, தூய்மைப் பணியில் ஈடுபடுத்திட, தேவையான நடவடிக்கை எடுத்திடவும் தமிழ்நாடு நகராட்சித் துறையும், தேனி மாவட்ட நிர்வாகமும் முன்வர வேண்டும் என்பது தான் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகவும், கோரிக்கையாகவும் இருக்கிறது.
கடந்த 06/09/2025 தேதி சனிக்கிழமை காலை ஏழு மணியளவில், செக் போஸ்ட்டை தாண்டி, கேரளாவுக்கு, மூணாறுக்கு சென்ற மேற்படி அரசு ஜீப் (TN60 N 5418) வாகனம், மீண்டும் கடந்த 07/09/2025 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை நான்கு மணியளவில், கேரளா செக் போஸ்ட்டை தாண்டி, தமிழ்நாட்டுக்கு, போடிநாயக்கனூருக்கு வந்தது என்பது கூடுதல் தகவல்……..






