March 2, 2026
அமைதி பேச்சு வார்த்தைக்கு நேபாள காங்கிரஸ், நேபாளா கம்யூனிஸ்ட் கட்சி மாவோயிஸ்டுக்கு அழைப்பு :

அமைதி பேச்சு வார்த்தைக்கு நேபாள காங்கிரஸ், நேபாளா கம்யூனிஸ்ட் கட்சி மாவோயிஸ்டுக்கு அழைப்பு :

நேபாளத்தில் சமீபத்தில் நடந்த ஜென் Z தலைமுறைப் போராட்டங்கள் உலகெங்கிலும் உள்ள ஆட்சியாளர்களுக்கு ஒரு சக்திவாய்ந்த செய்தியை வழங்கியுள்ளன.

சமூக ஊடகங்களுக்கான திடீர் தடைக்கு எதிரான கோபமாகத் தொடங்கிய இந்த நிகழ்வு, விரைவில் நாடு தழுவிய இயக்கமாக மாறி, அங்கே ஆட்சியே கவிழும் நிலை ஏற்பட்டு உள்ளது.

நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் இந்தியா பயணத்திற்கு முன்னதாகவும், அவர் சீனாவிலிருந்து திரும்பிய பின்னரும் ஏற்பட்டுள்ளன. இதில் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவின் அண்டை நாடான நேபாளம், பல்வேறு வெளிநாட்டு சக்திகளின் களமாக மாறியுள்ளது.

நேபாளத்தில் சமூக ஊடகத் தடைக்கு எதிராக வெடித்த போராட்டங்களைத் தொடர்ந்து, முன்னாள் துணைப் பிரதமர் ரபி லாமிச்சானே நக்கு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து, நேபாளப் பிரதமர் கே.பி. ஷர்மா ஓலி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பல்வேறு போராட்டம் நடந்து வரும் வேளையில்.பிரதமர்.நிதி அமைச்சர். அமைச்சர்கள் பலரும் ராஜினாமா செய்தனர்.பலரும் தலைமறைவாகி வருகிறார்கள்‌‌.

நாடு முழுவதும் அமைதியின்றி தீ வைப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.முக்கிய கட்டங்கள் நீதி மன்றம்.பாராளுமன்றம்‌.

அமைச்சர் வீடுகள் என பல்வேறு கட்டங்கள் எரிந்து வருகிறது.இதற்கிடையே ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி பிரதமராக பொறுப்பேற்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் நேபாளம் காங்கிரஸ் கட்சி.நேபாள கம்யூனிஸ்ட் கட்சி.மாவோயிஸ்ட்டுகள் என்று குழுக்கள் அமைதி ஏற்பட பேச்சு வார்த்தைக்கு முன் வரவேண்டும் என்று போராட்ட குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *