March 2, 2026
கராத்தே மாஸ்டருக்கு விருது

கராத்தே மாஸ்டருக்கு விருது

நாகர்கோவில் :

கராத்தே மாஸ்டருக்கு இதழியல் இதயம் விருது வழங்கப்பட்டது. இதனை பிரபல திரைப்பட இயக்குனர் நாஞ்சில் அன்பழகன் வழங்கினார்

கன்னியாகுமரி மாவட்டதில் உள்ள நாஞ்சில் கலையகம் சார்பில்
பொற்றையடியில் உள்ள அரங்கத்தில், முத்தமிழ்ச் சங்கமக் கலை இலக்கிய விழா விமர்சையாக நடைபெற்றது.

இவ்விழாவில், கராத்தே மாஸ்டர் ஜி. ஜெயகர்ணன் அவர்களுக்கு “இதழியல் இதயம்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அந்த விருதை பிரபல திரைப்பட இயக்குநர் மற்றும் சமூக ஆர்வலர் நாஞ்சில் அன்பழகன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் நாஞ்சில் கலை இலக்கியக்கழகத்தின் நிறுவனர் மயூரி சீத்தாராமன், தலைவர் கவிஞர் M. ஈஸ்வரன், செயலாளர் கவிஞர் உமையவள்தாசன், முனைவர் சுபத்ரா செல்லத்துரை, இந்திய பாரம்பரிய கலாச்சார பேரவையின் தலைவர் முதற்சங்கு சிவனி சதீஷ், ஆகியோர் பங்கேற்று வாழ்த்தினர்.

மேலும், இசைவாணி V. உமா, நடிகையர் திலகம் அம்பிகா, எழுத்தாளர் கடலம்மா ஜூடி சுந்தர், “லிம்கா” சாதனையாளர் D. மதிமயக்கும்பெருமாள், இசைக்குயில் S.P. ஷோபிகா, கவிஞர் சுவாமிதாஸ், கவிஞர் சரவை ஞானசேகரன், கவித்தென்றல் சி. மோகன், கவிச்சுடர் புலவர் அ. மதுப்பிரியா, கவிதாயினி விஜி பூரண்சிங், கவியருவி R. ரவிச்சந்திரன், கவிஞர் Y. அகமது பஷீர், கவிக்குயில் குமரி. உத்ரா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *