
வில்லானேந்தல் ஜெய் ஸ்ரீ அழகுவள்ளி அம்மன் திருக்கோவில் பௌர்ணமி பூஜை அன்னதானம்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், ஆன்மீக ஸ்தலமாக விளங்கும் வில்லானேந்தல் கிராமத்தில் பக்தர்களின் மனங்களில் நிலைத்திருக்கும் அருள்மிகு ஜெய் ஸ்ரீ அழகுவள்ளி அம்மன் திருக்கோவில் சக்தியின் வடிவமாகவும், அருளின் ஊற்றாகவும் திகழும் இந்தத் திருத்தலத்தில் பல ஆன்மிக நிகழ்வுகள் நடைபெற்று, கிராமத்தையே பக்தி பேரொலியால் ஆழ்த்துகின்றன.
அம்மன் கோவிலில் பௌர்ணமி நாளன்று சிறப்பு பூஜை மிகுந்த பக்தி சிறப்புடன் வருடம் முழுவதும் நடைபெறுகின்றது. இதனை முன்னிட்டு, ஆலயத்திற்கு தரிசனம் செய்ய வந்த நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு, கிராம பொதுமக்கள் சார்பில் அன்னதானம் , தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பக்தர்கள் அனைவரும் அம்மன் அருளைப் பெற்ற மகிழ்ச்சியுடன், அன்னதானத்தில் பங்கேற்று திருப்தியடைந்தனர்.
இந்த அன்னதான சேவை வெறும் உணவளிப்பாக அல்லாமல், “அம்மன் சக்தி, அருளின் ” மற்றும் “கருணையின் வெளிப்பாடு” எனக் கருதப்படுகிறது. கிராம மக்கள், “அம்மன் அருளால் அனைவருக்கும் நலமும் வளமும் பொங்கட்டும்” என்ற புனித நோக்கத்துடன் வருடம் முழுவதும் பௌர்ணமி நாட்களில் இதனை நடத்தி வருகின்றனர்.
ஜெய் ஸ்ரீ அழகுவள்ளி அம்மன், சகல சித்திகளையும் அருளும் தெய்வீக சக்தியின் உருவமாக . நோய்கள், துன்பங்கள், தடைகள் அனைத்தையும் நீக்கி, ஆரோக்கியம், குடும்ப ஒற்றுமை, செல்வ வளம், கல்வி, தொழில், வியாபார வெற்றி, சந்தோஷம், அமைதி போன்ற பல நன்மைகளையும் கிடைக்கப் பெறுகின்றனர் பக்தர்கள் “அம்மனை பக்தியுடன் வழிபட்டால் நிச்சயமாக வாழ்வில் ஆனந்தமும் அமைதியும் நிலைக்கும்” அம்மனின் அருளை உணர்ந்த பக்தர்கள் பெருமளவில் வருகை தருகின்றனர்.
இந்நிகழ்வை சிறப்பாகச் செய்து வரும், ஆதரவளிக்கும் இளைஞர்கள் பொதுமக்கள் . “அம்மன் அருளால் அனைவருக்கும் நலமும் வளமும் உண்டாகட்டும்”
கிராம பொதுமக்கள் பக்தர்கள், AV அம்மன் குரூப்ஸ் அனைத்து பக்தர்களும் வருக அம்மனின் அருள் பெறுக






