
லாரி டிரைவர் விபத்தில் சிக்கினார்.
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா பாளையம் அருகே பாம்பாட்டி களம் என்ற இடத்தில் ஒரு டிப்பர் லாரி சாலை ஓரம் நின்று இருந்தது. அந்த லாரியின் டிரைவர் லாரியின் பின்பக்கமாக நின்று கொண்டிருந்தார்.
அப்பொழுது சற்று தூரத்தில் நின்று இருந்த டிரைவர் இல்லாத லாரி தானாக நகர்ந்து வந்து நின்றிருந்த லாரியின் பின்பக்கமாக மோதியது. இதில் லாரியின் பின்னால் நின்று இருந்த ஈரோடு மாவட்டம் கோவிந்தபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சிவானந்தம் என்ற டிரைவர் முகம் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.






