
பழனி அருகே புளியம்பட்டி அமைச்சர் சக்கரபாணி தொகுதியில் கள்ளச் சந்தையில் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது :பழனி அருகே புளியம்பட்டி அமைச்சர் சக்கரபாணி தொகுதியில் கள்ளச் சந்தையில் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது :
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஒட்டன்சத்திரத்தில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புளியம்பட்டி மதுபான பார் செயல்பட்டு வருகிறது.

டாஸ்மார்க் கடையில் 3378 எண் கொண்ட மதுபான கடை இன்று மிலாடி நபியை முன்னிட்டு விடுமுறையை மதுபான அடுத்து ,பாரில் வைத்து கள்ளசந்தையில் மது பான பாரில் வைத்து மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
இன்று மிலாடி நபியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மதுபான கடை விற்பனை அனுமதி இல்லாத நிலையில் பழனி அருகே அமைச்சர் சக்கரபாணி என்பவரது உறவினரான சோமசுந்தரம் என்பவர் மதுபான பாரை நடத்தி வருகிறார்.
இவர் செய்தியாளர்கள் செய்தி எடுத்து கொண்டு இருக்கும் போது உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள்ளுங்கள் என தெரவித்தார்.
பழனி அருகே ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உணவுத்துறை அமைச்சர் தொகுதியில் மிலாடி நபி முன்னிட்டு கள்ள சந்தையில் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






