
வளர்ச்சிப் பணிகள் ஆய்வு.
மதுரை:
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி, மதுரை மாவட்டம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் தேனூர் ஊராட்சி கட்டப்புளி கிராமத்தில் 400 பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டா இடத்தில் முதற்கட்டமாக 72 மாற்றுத்திறனாளிகள், 37 திருநங்கைகள்,85 வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள நபர்கள் என மொத்தம் 194 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டப்பட்டு வரும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் பா.பொன்னையா, மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் , சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன் ஆகியோர் உடன் உள்ளனர்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் பா.பொன்னையா, மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் தலைமையில் மதுரை மாவட்டம், ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் தலா ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் குடியிருப்பு மற்றும் முகாம் அலுவலக கட்டடம் கட்டப்பட்டு வரும் பணியினை ஆய்வு செய்தார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் பா.பொன்னையா, மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் தலைமையில் மதுரை மாவட்டம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், வெளிச்சநத்தம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ், பல்வேறு அரசுத்திட்டங்களின் கீழ் கடந்த 2001-ம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்டு தற்போது சீரமைக்க முடியாமல் மிகவும் பழுதடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டும்‘முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமான திட்டம்’ கீழ், ரூபாய் 2.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடு கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டார்.






