
முதல்வர் கோப்பை போட்டியில் கராத்தே விளையாட்டை ஏன் சேர்க்கவில்லை
தமிழனின் வீரக்கலை கராத்தே விளையாட்டில் இன்றைக்கு தமிழகத்தில் சுமார் ஐம்பது லட்சத்திற்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் வீராங்கனைகள் பயிற்சியாளர்கள் இரத்தம் சிந்தி பயிற்சி பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் விளையாட்டு துறைக்கு கோடி கோடியாக வாரி வழங்கி வருகின்ற தமிழக முதல்வர் அவர்களை மனதார பாராட்டுகின்றேன் வாழ்த்துகின்றேன் வணங்குகின்றேன், விளையாட்டு வீரர்களுக்கு தொடர்ந்து அரசு பணிகளை வழங்கி வருகின்ற துணை முதல்வர் விளையாட்டு துறை அமைச்சர் அவர்களுக்கும் தமிழகத்தில் இருக்கும் லட்சக்கணக்கான கராத்தே பயிற்சியாளர்கள் சார்பில் மணமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்
தமிழனின் வீரக்கலை கலை கராத்தே விளையாட்டை முதல்வர் கோப்பை போட்டியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஏன் சேர்த்துக் கொள்ளவில்லை, என்று தெரியவில்லை,விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் எங்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசின் கவனத்திற்கு ஏன் இது நாள் வரை கொண்டு செல்லவில்லை என்பதும் தெரியவில்லை
தமிழக முதல்வர் அவர்களும்,துணை முதல்வர் விளையாட்டு துறை அமைச்சர் அவர்களும் விளையாட்டு துறைக்கு கோடி கோடியாக வாரி வழங்கி வருகின்ற நிலையில், விளையாட்டு துறைக்கு தலைமை தாங்கும் அதிகாரிகள்,விளையாட்டு வீரர்களை மதிப்பது இல்லை, விளையாட்டு துறையில் அனுபவமும் இல்லாமல்,தமிழக அரசுக்கு அவப்பெயரை உண்டாக்கி வருவது வெட்கக்கேடு முதல்வர் வாழ்க வாழ்க வாழ்க
கராத்தே வீரர்கள் வீராங்கனைகள் பாதுகாப்பு நலசங்கத்தின் தலைவர்
தனசேகரன்
9003215719






