March 2, 2026
கன்னிவாடி பேரூராட்சி பகுதிகளில் 3.64 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட மற்றும் புதிய திட்டப் பணிகளை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர் :

கன்னிவாடி பேரூராட்சி பகுதிகளில் 3.64 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட மற்றும் புதிய திட்டப் பணிகளை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர் :

திருப்பூர் மாவட்டம், மூலனூர் கன்னிவாடி பேரூராட்சி பகுதிகளில் 3.64 கோடி மதிப்பிலான கட்டி முடிக்கப்பட்ட மற்றும் புதிய திட்டப் பணிகளை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

மூலனூர் மற்றும் கன்னிவாடி பேரூராட்சிகளில் புதிய திட்டப் பணிகள் மற்றும் கட்டி முடிக்கப்பட்ட பணிகளை செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கே.இ. பிரகாஷ் முன்னிலையில் தொடங்கி வைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் கன்னிவாடி பேரூராட்சிக்கு உட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5-நிதி ஆனைய மானிய திட்டத்தின் கீழ் ரூ.75-லட்சம் மதிப்பில் கூடுதல் பொது சுகாதார கட்டிடம் கட்டும் பணி மற்றும் மூலனூர் பேரூராட்சிக்குட்பட்ட மூவேந்தர் நகரில் ரூ.11-லட்சம் மதிப்பில் புதிய நியாய விலைக் கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கும் 15வது மானிய குழு திட்டத்தின் கீழ் திருநீலகண்டபுரத்தில் 60-ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி ரூ.20-லட்சம் மதிப்பில் புதிய மேல்நிலைத் தொட்டி அமைக்க பூமி பூஜை மற்றும் மூலனூர் நாச்சிபாளையம் இடையே ஜூன் 20 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி மற்றும் 15-வது மானியக்குழு திட்டத்தின் கீழ் மூலனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 66-லட்சம் மதிப்பில் பொது சுகாதார கட்டிடம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை மற்றும்75-லட்சம் மதிப்பில் பொது சுகாதார வளாகம் அமைக்கும் பணி மற்றும் கோல்லபட்டியில் அயோத்திதாஸ் பண்டிதர் 70- லட்சம் மதிப்பில் புதிய சமுதாயக்கூடம் கட்டும் பணி மற்றும் மூலனூர் பி.எஸ் என் எல் அலுவலகம் முன்பாக ரூ.5. லட்சம் மதிப்பில் உயர் மின்விளக்கு கோபுரம் அமைக்கப்பட்டு அமைச்சர்கள் திறந்து வைத்தனர். இந்த நிகழ்வில் திருப்பூர் மாநகராட்சி 4- மண்டல தலைவர் இல.பத்மநாபன், மூலனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் துரை தமிழரசு தாராபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மீசை துரை மற்றும் மூலனூர் பேரூராட்சி தலைவர் மக்கள் தண்டபாணி துணைத் தலைவர் செல்லமுத்து கன்னிவாடி பேரூராட்சி தலைவர் சுரேஷ் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் திரளானோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *