
நிலக்கோட்டை அருகே விஜயகாந்த் பிறந்த தினத்தை முன்னிட்டு 1000 பேருக்கு அன்னதானம்
நிலக்கோட்டை, ஆக.26-
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள அக்ரகாரபட்டியில் தேமுதிக கட்சியின் நிறுவனரும், கட்சித் தலைவருமான நடிகர் விஜயகாந்த் 73 வது பிறந்த தினத்தை முன்னிட்டு நிலக்கோட்டை தே.மு.தி.க.வடக்கு ஒன்றிய செயலாளர் ஏ.வி.ஆர். பழனி தலைமையில் நடைபெற்றது.
ஒன்றிய அவைத் தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வைத்தார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் முத்துக்காளை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.கிராம மக்கள் சுமார் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் நித்யாமுருகேந்திரன், ஜெயக்குமார், வெங்கடேசன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, ஆத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் முதது, அக்ரகாரப்பட்டி கிளைச்சாளா சுப்ரமணி, ஊராட்சி செயலாளர் மாசாணம், மிளகாய் பட்டி கிளை பொறுப்பாளர் ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






