March 2, 2026
பீர்மேடு சட்டமன்ற உறுப்பினர் வாழூர் சோமன் காலமானார்.

பீர்மேடு சட்டமன்ற உறுப்பினர் வாழூர் சோமன் காலமானார்.

கேரளா, பீர்மேடு சட்டமன்ற உறுப்பினர் வாழூர் சோமன் காலமானார்.
பீர்மேடு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) தலைவருமான வாழூர் சோமன் (72) காலமானார். திருவனந்தபுரத்தில் வருவாய்த்துறை தொடர்பான கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்த அவர், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

2021 சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் சிரியாக் தாமஸை 1,835 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வாழூர் சோமன் வெற்றிபெற்றார். பொதுவாழ்வில் நீண்டகாலம் ஈடுபாட்டுடன் செயல்பட்ட அவர், மக்களின் அன்பைப் பெற்ற தலைவராகத் திகழ்ந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொது அமைப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *