March 5, 2026
இந்திய சுதந்திரப் முதல் போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவர் 310 வது பிறந்த தினத்தில் தமிழக அரசு சென்னையில் பூலித்தேவருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் நிலக்கோட்டையில் தீர்மானம்

இந்திய சுதந்திரப் முதல் போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவர் 310 வது பிறந்த தினத்தில் தமிழக அரசு சென்னையில் பூலித்தேவருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் நிலக்கோட்டையில் தீர்மானம்

நிலக்கோட்டை, ஆக.21-

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி, சிவகிரி தாலுகா , நெற்கட்டான் செவ்வயல் தென்னகத்தின் தேசிய திருவிழா மாமன்னர் பூலித்தேவர் 310 வது பிறந்த தின விழா செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெறும் விழாவிற்கு நெற்கட்டான் செவ்வயல் விழா ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் நிலக்கோட்டையில் உள்ள உலகமெங்கும் வாழும் பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு நிர்வாகிகளை சந்தித்து அழைப்பு விடுத்தும், அதன் பின்னர் பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் ராஜாராம் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். தமிழக அரசு இந்திய சுதந்திர முதல் போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவருக்கு சென்னையில் மணிமண்டபம் கட்டப்பட வேண்டும் என்றும், சங்கரன் கோயில் நகரில் உள்ள சங்கரநாராயணன் பூலித்தேவர் ஜோதியான இடத்தில் பூலித்தேவருக்கு சிலை வைக்கவும், நெற்கட்டான் செவ்வயல் என்ற இயற்பெயரை தமிழக அரசு நெற்கட்டும் செவல் என்று இன்று அழைக்கப்படுவதை உடனடியாக மாற்றி பூலித்தேவருடைய புகழை உறுதிப்பட நெற்கட்டான் செவ்வயல் என்று அழைக்க அரசாணை வெளியிடக் கோரியும், தமிழக அரசு அலுவலகங்களில் முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவரின் திருவுருவப் படத்தை வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் நெற்கட்டான் செவ்வயல் மாமன்னர் பூலித்தேவர் 310 வது பிறந்தநாள் விழா ஒருங்கிணைப்பு குழுவினர், மூத்த உறுப்பினர் பொன்னையா, கூட்டமைப்பு பொருளாளர் இளங்கோ, செயலாளர் முருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் மாயாண்டி, மற்றும் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *