March 2, 2026
நிலக்கோட்டை ஒன்றியத்தில் 10 க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் கள்ளர் விடுதி பெயரை சமூக நீதி விடுதிகள் என பெயர் மாற்றம் செய்யக்கூடாது என ஒரே கோரிக்கையை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட மனுக்கள் குவிந்தது. பரபரப்பு.

நிலக்கோட்டை, ஆக.16-

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள எஸ் மேட்டுப்பட்டி, விளாம்பட்டி, ராமராஜபுரம், முசுவனூத்து, பிள்ளையார் நத்தம் உள்ளிட்ட சுமார் 10 க்கு மேற்பட்ட ஊராட்சிகளில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடந்த கிராம சபை கூட்டத்தில் கிராம பொதுமக்கள் தமிழக அரசு கள்ளர் விடுதிகளை சமூக நீதி விடுதிகள் என தமிழகத்தில் உள்ள மதுரை திண்டுக்கல் தேனி மாவட்டங்களில் உள்ளதில் பெயர் மாற்றம் செய்ய அரசாணை வெளியிட்டதை தொடர்ந்து ஆங்காங்கே பெயர் மாற்றம் செய்வதை கண்டித்தும், உடனடியாக அரசாணை ரத்து செய்யக் கோரியும் ஒரு கிராம சபை கூட்டத்தில் ஒரே கோரிக்கையை வலியுறுத்தி ஒவ்வொரு நபரும் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் 50 மனுக்கள் வாயிலாக மனுக்கள் கொடுத்ததை தொடர்ந்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இதன் காரணமாக பொதுமக்கள் திரண்டு ஒரே கோரிக்கையை வலியுறுத்தி கொடுத்த மனுக்கள் மிகப் பரபரப்பு ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *