March 2, 2026
சுதந்திர தின விழா - 2025

சுதந்திர தின விழா - 2025

மதுரை:

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே. பிரவீன் குமார், இன்று(15.08.2025) சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மதுரை, ஆயுதப்படை பயிற்சி மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு சால்வை அணிவித்து கௌரவித்து, 42 பயனாளிகளுக்கு ரூபாய் 42.21 லட்சம் மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

மேலும், சிறப்பாக பணியாற்றிய மாவட்ட முதல் நிலை அலுவலர்கள், காவல்துறை
உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் என 314 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்கள்.

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே. பிரவீன் குமார், இன்று(15.08.2025) சுதந்திர தின விழாவை முன்னிட்டு மதுரை, மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில், உள்ள உத்தமர் காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குடிநீர் மேம்பாட்டு பணிக்காக சோழவந்தான் ரோட்டில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்ட வரும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த குடிநீர் மேம்பாட்டு பணிக்காக ரூபாய் 52.53 கோடி மதிப்பீட்டில் திருமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட சோழவந்தான் ரோடு,ரதிராஜன் நகர், மதுரை ரோடு,கற்பகம் நகர் ஆகிய இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சியில் முகமதுஷாபுரம் கிழக்கு 4ஆவது தெருவில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 46.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பூங்காவினை ஆய்வு செய்து பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது, பூங்காவில் பழுதடைந்துள்ள சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்களை சரி செய்யவும், செடி மரங்களை முறையாக தண்ணீர் ஊற்றி பராமரித்து, நாள்தோறும் பூங்காவினை தூய்மையாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தினார்.

உடற்பயிற்சி கூட உபகரணங்களுடன் பூங்காவினை மேம்படுத்தி முன்னோடியான பூங்காவாக உருவாக்க உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *