
மதுரையில் ஆகஸ்ட் 21 மாநாடு – வடக்கு மாவட்ட தொண்டர்கள் பொதுச் செயலாளர் உடன் சந்திப்பு
மதுரை: வருகிற ஆகஸ்ட் 21ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள மாநாட்டை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்களை மரியாதை நிமித்தமாக மதுரை வடக்கு மாவட்ட தொண்டர்கள் சந்தித்தனர்.
இந்நிகழ்வில் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் விஜய் அன்பன் கல்லானை, மதுரை வடக்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் Er. S. அலாவுதீன், டாக்டர் தீபன் சக்கரவர்த்தி, மாத்தூர் ரஞ்சித், சேகர் கிருஷ்ணா, சக்தி பொன்னர், கார்த்திக், பிரசாந்த், அஜித், சங்கர், ரிஜின், அழகு பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






