
அமெரிக்க டிரம்பர் இந்தியா மேல் கடும் ஆத்திரத்தில் மோடி கண்ட உபிக்கள் போல் கத்தி கொண்டிருப்பது உலகறிந்தது, இதில் நன்றாக கவனித்தால் ஒரு உண்மை விளங்கும்
டிரம்பர் கண்டபடி கரித்துகொட்டும் நாடுகள் எது என்றால் பொருளாதாரத்தில் வலுத்து அமெரிக்காவுக்கு சவால்விடும் நாடுகள், கனடா, ஜெர்மன், ஜப்பான், சீனா என எல்லாமே வலுவான பொருளாதாரம் கொண்டவை டிரம்பரின் வயிற்றெரிச்சலுக்கு காரணம் இதுதான்
அதில் இந்தியாவும் சேர்ந்து கொண்டதால் கத்துவார் மற்றபடி தரித்திர தேசங்களான பாகிஸ்தான், ஆப்கன் இன்னபிற நாடுகளை அவர் அன்பால் அரவணைப்பார் காரணம் காலத்துக்கும் அவை உருப்பட போவதில்லை என்பது அவருக்கு தெரியும்
இதனால் இந்தியா போன்ற நாடுகள் வளர்வது தங்களுக்கு ஆபத்து என இந்திய பொருளாதாரம் செத்த பொருளாதாரம் என திமுக உபிக்கள் போல சாடி கொண்டிருக்கின்றார்
இதை ராகுலும் அப்படியே வழிமொழிவது வேறுவிஷயம், டிரம்பரின் இந்த பிதற்றலுக்கு மிக அமைதியாக பதில் கொடுத்திருக்கின்றார் மோடி
அவர் தன் உரையில் உலகின் மூன்றாம் பொருளாதார பலம் கொண்ட தேசம் என நாம் முன்னேறி கொண்டிருக்கின்றோம், இந்நேரம் நாம் இன்னும் முழு சுதேசி கொள்கைக்கு திரும்பவேண்டும், பாரத மக்கள் இந்திய தயாரிப்புக்கு முன்னுரிமை கொடுத்தல் வேண்டும், இந்தியராய் இந்தியர் தயாரித்த பொருளுக்கும் தொழிலுக்கும் முன்னிரிமை கொடுத்து அயலக தயாரிப்புகளை தள்ளிவைத்தல் வேண்டும்
உங்கள் இல்லம் முதல் தொழிற்சாலை அலுவலகம் வரை எல்லாமே இந்திய தயாரிப்பால் நிரம்பட்டும் என சொல்லி இந்த சுதந்திர மாத கொண்டாட்டத்தை தொடங்கியிருக்கின்றார்
அதாவது இந்தியா இனி சொந்த தயாரிப்பை ஊக்குவிக்கும் எந்த நாட்டையும் நம்பியிருக்காது என டிரம்பரை ஏதோ ஒன்றினால் அடித்திருக்கின்றார்
அந்த முழக்கத்தோடு தேசத்தை சுதந்திர தின கொண்டாட்டத்துக்குள் அழைத்து செல்கின்றார், இம்முறை பாரத பிரதமரின் சுதந்திர நாள் உரை மிக மிக கூர்மையானதாக நாட்டுக்கும் உலகுக்கும் பெரும் செய்தியினை சொல்லும் உரையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை
பிரம்ம ரிஷியார்






