
மதுரையில் தூர்வாரும் பணி: அமைச்சர் பி. மூர்த்தி ஆய்வு
மதுரை:
தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி , மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், ஜாங்கிட் நகரில் உள்ள கன்னிக்குடி கண்மாயில் தனியார் பங்களிப்புடன் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு , மியாவாக்கி முறையில் 5000 மரங்கள் நடும்
மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் , சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன் ஆகியோர் உடன் உள்ளனர்.
ரேசன் கடை திறப்பு: அமைச்சர்: வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி
இன்று 4-8-2025) மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், இரணியம் ஊராட்சி ஜாங்கிட் நகரில் புதிய நியாய விலை கடையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் , சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன் ஆகியோர் உடன் உள்ளனர்.






