
உணவகம் கட்டிடம்: திறப்பு:
மதுரை:
மதுரை மாவட்டம், ஹோட்டல் தமிழ்நாடு வளாகத்தில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் விருந்து மண்டபக் கட்டிடம் மற்றும் பிற உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய உணவகக் கட்டடம்
தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்.
மதுரை மாவட்டம், ஹோட்டல் தமிழ்நாடு வளாகத்தில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் விருந்து மண்டபக் கட்டிடம் மற்றும் பிற உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய உணவகக் கட்டடம் தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டார். ஓட்டல் தமிழ்நாடு மதுரை அலகு-2ற்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகவும் கூடுதல் வருவாய் ஈட்டும் நோக்கோடும் நவீன வசதிகளுடன் கூடிய நிகழ்விடங்கள். உணவறைகள், சமையலறை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடுதல் கட்டிடம் ரூ.7 கோடி மதிப்பீட்டில கட்டப்பட்டு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்குச் சொந்தமான தமிழ்நாடு ஓட்டல்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு ஏற்ப பல்வேறு வசதிகளை மேம்பாடு செய்து புதுப்பொலிவுடன் சிறப்புற மட்டுமின்றி திருமணம், வர்த்தக கருத்தரங்கு, சமூக நிகழ்ச்சிகள் அரசு விழாக்கள் நடைபெறும் வகையில் சிறந்த வர்த்தக நட்சத்திர விடுதியாக செயல்பட்டு வருகிறது.
மதுரையில் அழகர் கோவில் சாலையிலும், பெரியார் பஸ் நிலையம் அருகேயும் ‘ஓட்டல் தமிழ்நாடு’ என்ற பெயரில் ஓட்டல்கள் செயல்படுகின்றன. குறைவான வாடகையில் காலை இலவச உணவு வசதியுடன் கூடிய குளிர்சாதன வசதி உள்ள அறைகளும், குளிர்சாதன வசதி அல்லாத அறைகள், விசாலமான கார் நிறுத்தம், கருத்தரங்குக் கூடங்கள் குளிர்சாதன வசதிகளுடன் கூடிய மதுபானக்கூடம், குழந்தைகள் விளையாட்டு சாதனங்களுடன் கூடிய விளையாட்டு மைதானம் மற்றும் அதிநவீன மின் உலர் சலவையகம் ஆகிய வசதிகள் உள்ளன. மதுரை அழகர்கோயில் சாலையில் உள்ள ஓட்டலில் குளிர்சாதன வசதி உள்ள அறைகளும், குளிர்சாதன வசதி அல்லாத அறைகளும், “இயல்” “இசை”, என்னும் கூடங்களும், மேலும் 400 நபர்கள் அமரக்கூடிய “நாடகம்” என்னும் திருமண அரங்கு மற்றும் “முத்தமிழ்” என்னும் குளிர்சாதன வசதியுடன் கூட்ட அரங்கமும் பிரமாண்டமான முறையில் சிறப்புற அமையப் ”நாட்டியம்” என்னும் திறந்தவெளி அரங்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் சமூக நிகழ்வுகள் மற்றும் பொழுதுபோக்கு பொருட்காட்சி ஆகியவற்றிற்கு குறைந்த வாடகைக்கு அளிக்கப்படுகிறது.
மேலும் “அமுதகம்” எனப்படும் குளிரூட்டப்பட்ட பல்சுவை உணவகம் தங்கும் விருந்தினர் மற்றும் பிற விருந்தினர்களுக்காக காலை 06.00 மணி முதல் இரவு 09.30 மணிவரை செயல்படுகிறது. இவ் உணவகத்தில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி உண்ணக் கூடிய தென்னிந்திய, வடஇந்திய மற்றும் சைனீஸ், தந்தூரி உணவு வகைகள் சரியான விலையில் செயற்கை நிறமூட்டிகளோ, சுவையூட்டிகளோ சேர்க்கப்படாமல் தரமானதாக தயார் செய்து விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது நவீன வசதிகளுடன் கூடிய நிகழ்விடங்கள், உணவறைகள், சமையலறை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடுதல் கட்டமைப்புடன் மேம்படுத்தப்பட்டுள்ள ஓட்டல் தமிழ்நாடு மதுரை மாநகர மக்களுக்கு மிகப்பெரிய பயனுள்ளதாக அமையும்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் , சட்டமன்ற உறுப்பினர் (மதுரை வடக்கு) கோ.தளபதி, மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் மாவட்ட வருவாய் அலுவலர் அன்பழகன், மாவட்ட சுற்றுல அலுவலர் சோ.ஸ்ரீபாலமுருகன் , மண்டல மேலாளர் (தெற்கு) மு.கணேஸ்வரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.