
பழனி டைமண்ட்ஸ் லயன்ஸ் கிளப் சார்பாக மரக்கன்று நடுவிழா
பழனி டைமண்ட்ஸ் லயன்ஸ் கிளப் சார்பாக பழனி நகர காவல் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள பசுமை பூங்காவில் வேலி அமைத்துக் கொடுத்து லயன்ஸ் குழுவினர் சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டன.
இதில் பழனி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தனஞ்செயன், நகர் காவல் ஆய்வாளர் மணிமாறன், நகர் சார்பு ஆய்வாளர் விஜய், சாய் கிருஷ்ணா மருத்துவமனையின் இயக்குனர் லயன் சுப்புராஜ், பிபிஎன் மருத்துவமனை மருத்துவர் விமல் குமார் , லயன் சூப்பர் முத்துக்குமார் ஆடிட்டர் பாபநாசம் மற்றும் டைமண்ட்ஸ் கிளப் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.






