March 2, 2026
மனுக்கள் பெறும் முகாம் !

மனுக்கள் பெறும் முகாம் !

உசிலம்பட்டி:

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் மாவட்ட ஊராட்சி நிறுவாகம் சார்பாக தொட்டப்
பநாயக்கனுர் மற்றும் நக்கலப்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தப்பட்டது.இம்முகாமை, உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர், உசிலம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

இரண்டு ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு பதினைந்து துறைகளின் சேவைகளான பட்டா மாறுதல், முதல்வர் காப்பீட்டு அட்டை, மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை, மின் கட்டண பெயர் மாற்றம், ஆதார் சேவை, வேளாண் மானியம், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, போன்ற மக்களின் அவசிய தேவைகளுக்கான 1662 மனுக்கள் பெறப்பட்டன. ஊராட்சி செயலாளர்களுடன் இணைந்து ரிலீப் ப்ராஜெக்ட்ஸ் இந்தியா தொண்டு நிறுவன தன்னர்வ தொண்டர்களும் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளையும் முகாம் சிறப்பாக நடக்க உதவினார்கள்.

அவர்களின் பணிகளை, உசிலம்பட்டி வருவாய் கோட்டச்சியார் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பாராட்டி சென்றனர்.

மனுக்கள் பெறும் முகாம் !
மனுக்கள் பெறும் முகாம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *