March 2, 2026
ஆயக்குடியில் நடந்த கொள்ளையில் திடீர் திருப்பம்

ஆயக்குடியில் நடந்த கொள்ளையில் திடீர் திருப்பம்

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆயக்குடி, சச்சின் நகரில் குடியிருக்கும் LIC-ல் பணியாற்றும் ராமமூர்த்தி என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து 30 பவுன் தங்க நகை, ரூ.2 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். என்று தகவல் பரவியது தொடர்ந்து

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆயக்குடி போலீசார் ராமமூர்த்தியை அழைத்து வீடு முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்ட போது

30 பவுன் தங்க நகை மற்றும் ரூ.2 லட்சம் பணம் வீட்டின் வேறு ஒரு பக்கத்தில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக நகை மற்றும் பணம் பாதுகாப்பாக உள்ளது

வீட்டை உடைத்து திருட முயன்ற நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *