
அர்ஜுன் சம்பத் அறிக்கை! கோரிக்கை!! புகார் மனு!!!
தி.மு.க,திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற நிலையிலிருந்து கி.மு.க.வாக மாறி உள்ளது கிறிஸ்துவ முன்னேற்ற கழகமாக செயல்படுகிறது
அனைவருக்கும் பொதுவான நீண்ட காலமாக இருக்கின்ற வால் டாக்ஸ் சாலையை, எஸ்றா சற்குணம் சாலை என பெயர் மாற்றம் செய்து திறந்து வைத்துள்ளனர்
கிறிஸ்தவ மத வெறி பிடித்தவர் எஸ்றா சற்குணம் பெயரை பொது சாலைக்கு சூட்டுவதா?
சென்னையில் மிகவும் பிரபலமான வால் டாக்ஸ் சாலை எஸ்றா சற்குணம் சாலையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
ஏற்கனவே சென்னை கிரீன்வேஸ் சாலை கிறிஸ்தவ மத போதகர் டிஜிஎஸ் தினகரன் சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய திருச்சியைச் சார்ந்த தீவிர கம்யூனிஸ்டும் நக்சல்பாரியுமான கிறிஸ்தவ மத போதகர் ஸ்டேன் சாமி பாதிரியார் அவருக்கு விராதனூரில் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது
இந்துக்களின் புனித நூலான பகவத் கீதை பற்றி இழிவான கருத்துக்களை கூறியவர் எஸ்றா சற்குணம்
இந்துக்கள் அனைவரையும் கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்ய வேண்டும் மதமாற்றத்தை இந்துக்கள் ஏற்காவிட்டால் அவர்களின் அதாவது இந்துக்களின் மூக்கில் குத்த வேண்டும் ஓம் சாமி சொல்லுங்க சாமி அடியேன் என பேசிக் கலவரத்தை தூண்டியவர் எஸ்றா சற்குணம்
இப்படி தான் சார்ந்த மதத்திற்கு ஆதரவாகவும், பிற மதத்தை இழிவாகவும் பேசிய ஒருவரின் பெயரை, பொது சாலைக்கு சூட்டுவது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்!
இந்த சாலையை பழைய பெயரிலேயே அழைக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் கோருகிறோம்! இது தொடர்பாக கோரிக்கை புகார் மனுவை சமர்ப்பிக்கிறோம்!!
என்றும் தேசப் பணியில் தமிழ்த்திரு அர்ஜுன் சம்பத் இந்து மக்கள் கட்சி- தமிழகம்