August 8, 2025
மக்கள் போராட்டத்தால், ஆலை மூடப்பட்டது: எம்.பி.

மக்கள் போராட்டத்தால், ஆலை மூடப்பட்டது: எம்.பி.

மதுரை.

வேதாந்தா குழுமம் ஸ்டெர்லைட் ஆலையில் சுற்றுச்சூழல் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் போன்றவற்றின் விதிமுறை மிதியதில் முக்கிய பங்கு வகித்தது. மக்கள் போராட்டத்தால் ஸ்டெர்லைட் பூட்டப்பட்டது. மற்றபடி தொழில் நடக்கக்கூடாது என்பது அரசின் நோக்கம் அல்ல – மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்

அதிக லாபத்திற்காக தூத்துக்குடியை மாசுபடுத்துகிற திட்டமாக அது மாறியதால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது பிரம்மாண்டம் என்ற பெயரில் புதுசாக யாராவது கட்சி தொடங்குகிறார்கள் என்று பார்ப்போம் முதலில் பழனிச்சாமி வேலுமணியிடமிருந்து கட்சியை காப்பாற்றட்டும்-அதுக்கு பயந்து தான் பாஜக உடன் கூட்டு வைத்திருக்கிறார் எம்.பி. மாணிக்கத் தாகூர் விமர்சனம் செய்தார்.

மதுரை விமான நிலையம் விரிவாக்கப்பணி தொய்வு குறித்து தொடர்ந்து குரல் எழுப்பி குரல் எழுப்பி குரலுக்கு தண்ணி குடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி விட்டது.
மத்திய மாநில அரசு மாற்றி மாற்றி பழி சொன்னால் காலம் போய்விடும்.
மதுரையில் தவெக மாநாடு மகிழ்ச்சி பாராட்டக்கூடியது வரவேற்கப்பட வேண்டும் எம்.பி. மாணிக்கம் தாகூர் பேட்டி அளித்தார்.

மதுரை திருப்பரங்குன்றம், தொகுதிக்குட்பட்ட திருநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மதுரை மாநகராட்சி பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது இதனை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில்:

காமராஜர் பற்றி திருச்சி சிவா கூறிய விவகாரம் குறித்த கேள்விக்கு:
திமுக துணை பொதுச் செயலாளர் திருச்சி சிவா காமராஜர் குறித்து கூறியதற்கு வருத்தம் தெரிவித்துவிட்டார். பெருந்தலைவர் மீது அவர் வைத்திருக்கின்ற அன்பையும் மரியாதையும் குறித்து திமுக தலைமை கழகம் சார்பாக நீண்ட அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளார். எனவே, வருத்தம் தெரிவித்த பின்பு குறை காண்பது சரியாக இருக்காது. அவர் வருத்தம் தெரிவித்ததால் இந்த விஷயம் இதுவோடு முடிவடைகிறது என்று நினைக்கிறேன்.

இதை பெரிதாக்க வேண்டும் என்று பாஜக மிகப்பெரிய வேலை பார்க்கிறது. இந்தியா கூட்டணியில் வெறுசரை ஏற்படுத்துகின்ற முயற்சியில் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ். முயல்கிறது. இன்று தான் பாஜகவினருக்கு செய்தியே தெரிகிறது. அவர் நேற்று முன்பு இது குறித்து பேசி நேற்று காலை நாங்கள் கண்டனம் தெரிவித்து நேற்று மாலை வருத்தம் தெரிவித்து விட்டார். படம் முடிந்த பிறகு தான் அண்ணாமலை எழுந்து உட்கார்ந்து இருக்கிறார்.

அனைவரும் வருத்தப் படுகிறார்கள் இவர்கள் வருத்தமெல்லாம் முதலை நீலி கண்ணீர் விடுவதை போன்றது தான். பாஜகவின் வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தளபதி ஸ்டாலின் இணைந்து இந்தியா கூட்டணியின் ஒரு மித்த கருத்துடன் செயல்படுகிறோம். ஒன்பதாம் தேதி டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்க வேண்டும் என, ராகுல் காந்தி அழைப்பு விடுத்திருக்கிறார்.

பெருந்தலைவர் இந்தியாவின் அடையாளம். நேர்மையான அரசியல்வாதியின் அடையாளம். அவரைப் பற்றிய புரிதல் சிலருக்கு இல்லாமல் இருந்திருக்கலாம்.

திருச்சி சிவா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கருத்து குறித்த கேள்விக்கு:

இது உட்கட்சி பிரச்சனையாக இருக்கலாம். அதில் நாங்கள் தலையிட்டால் சரியாக இருக்காது. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எந்த அறிவாளி என்று தெரியவில்லை திருச்சி சிவாவை பொருத்த அளவில் திமுக நாடாளுமன்ற குழு தலைவராக ராஜ்யசபா மேலவையில் இருக்கிறார் .

தவிர அவர் பேர் இந்த அரசு பொறுப்பிலும் இல்லை வேண்டுமென்றால் திமுக பொறுப்பில் இருக்கலாம். தேவையற்ற பிரச்சனையை பெரிதாக்குவது பாஜகவின் வழக்கம் அதுவும் குறிப்பாக அண்ணாமலை நேற்று அவர் லண்டன் நண்பருடன் நேரம் செலவழித்து விட்டு இப்போது அறிக்கை விட துவங்கி இருக்கிறார்.

இது அவரின் சூழ்ச்சி. விமான நிலையை விரிவாக்க பணிகள் தொய்வு குறித்த கேள்விக்கு:

வருத்தமான விஷயம். விமான நிலைய விரிவாக்க பணிக்கு தொடர்ந்து நாங்கள் குரல் கொடுத்து குரல் கொடுத்து பொருளுக்கு தண்ணீர் குடிக்கிற நிலைமை ஆகிவிட்டது விமான நிலையம் தொடர்பாக பலமுறை தமிழக அரசுக்கு வலியுறுத்தி விட்டோம் முன்னாள் மாவட்ட ஆட்சியர் சங்கீதா இது குறித்து சென்னைக்கு அனுப்பி இருப்பதாக சொன்னார். அதன் பிறகு அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தமிழக அரசு இதில் விரைந்து நடவடிக்கை எடுத்து தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். அப்போது தான் வளர்ச்சியை நோக்கி முன்னேறும். மத்திய அரசு மாநில அரசு மாற்றி மாற்றி பழி சொன்னால் விமான நிலையத்தின் காலம் போய்விடும். மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இந்த பிரச்சனை முடிக்க வேண்டும் ஏனென்றால் மத்திய அரசு ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி விமான நிலைய வளர்ச்சி முடக்க பார்க்கிறார்கள் ஏற்கனவே சிங்கப்பூர் விமானத்தை நிறுத்தி விட்டார்கள்.

காரைக்கால் இரண்டாவது மதுரை மாநாடு குறித்த கேள்விக்கு:

மகிழ்ச்சி, மதுரையில் மாநாடு நடத்துவது பாராட்டப்பட வேண்டியது. வரவேற்க படவேண்டியது.
ஸ்டெர்லைட் மீண்டும் திறப்பது குறித்த கேள்விக்கு: ஸ்டெர்லைட் குறித்த முடிவு மிகத் தெளிவாக இருந்தது. தொழில் வரவேண்டும் என்பது வேறு, தொழில் நடக்க வேண்டும் என்பது வேறு அதே நேரத்தில் தொழிலை சட்டவிரோதமாக செய்வதும். பாதிப்பை உண்டாக்கும் வகையில் செய்வது வேதாந்த நிறுவனத்தின் தவறாக பார்க்கிறோம். வேதாந்தா பணத்தாசையில் கொள்ளையடிப் பதற்காக சுற்றுச்சூழல் வீதிகளை மீறியதால் தான் போராட்டம் நடைபெற்றது. அது தான் பிரச்சனை தவிர தொழில் நடக்க கூடாது என்று யாரும் சொல்லவில்லை. வேதாந்தாவின் பணவெறி இதில் மிக முக்கியமானது. அதிக லாபத்திற்காக தூத்துக்குடியை மாசுபடுத்துகிற திட்டமாக அது மாறியதால் எதிர்க்கப்பட்டது.

தமிழகத்தில் பிரம்மாண்டமான கட்சி அதிமுக கூட்டணி இணைய உள்ளதாக இபிஎஸ் கூறியது குறித்த கேள்விக்கு:

பிரம்மாண்டம் என்கிற பெயருடன் யாராவது புதிய கட்சி ஆரம்பிக்கிறார்களா என,
பார்ப்போம் அப்படி என்றால் ஒரு கட்சி அவர்களுடன் கூட்டணியில் சேரலாம். இபிஎஸ் முதலில் வேலுமணியிடமிருந்து கட்சியை காப்பாற்றட்டும், வேலுமணி சிவசேனா போல ஏக்நாத் ஷிண்டே கட்சியை பிரிப்பது போல பிரித்து சென்று விடுவார் என்கிற பயத்தால் தான் இவர் பாஜகவில் கூட்டு வைப்பதாக சொல்லப்படுகிறது. பாஜகவின் அடிமையாக அமித்ஷாவின் ரிமோட் கண்ட்ரோல் ஆக அதிமுக மாறிவிட்டது. பாஜக சொல்வதை செய்கின்ற கட்சியாக மாறிவிட்டது.

இது எம்ஜிஆர் ஜெயலலிதாவின் கட்சி இல்லை அமிர்தாவின் கட்சி. அடுத்த ஆட்சியின் போது இபிஎஸ்க்கு மக்கள் ஓய்வு கொடுப்பார்கள் என, முதல்வர் கூறியது குறித்த கேள்விக்கு:

ஓய்வு எஸ்பி வேலுமணியின் சதிதான் முக்கியமாக இருக்கப் போகிறது. அமித்ஷா அதிமுகவாக மாறி இருக்கின்ற கட்சியில் ஏற்கனவே அவருக்கு ஓய்வு வந்து விட்டது. அவரை மக்கள் வீட்டுக்கு அனுப்பி விட்டனர் வீட்டில் ஓய்வெடுத்து விட்டு தான் சேலத்தில் மாம்பழம் சாப்பிடுகிறார். ஒரு அளவில் இருக்கிற அதிகாரத்தை பறிப்பதற்காக வேலுமணி போன்றவர்கள் சதி செய்கிறார்கள் என, மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *