
கல்வி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா.
உசிலம்பட்டி.
அதிமுக முன்னாள் முதல்வரும் கழக பொதுச் செயலாளரும் எதிகட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி பிறந்த நாள் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சி துணைத்
தலைவருமான ஆர்.பி.உதயகுமார்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எருமார்பட்டியில் முன்னாள் முதல்வரும் கழக பொதுச் செயலாளரும் எதிகட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு 100 கோவில்களில் வழிபாடு, 100 கிராமங்களில் அன்னதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயக்குமார் கலந்து கொண்டு, முத்தாலம்மன், சந்தனமாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்து அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில், உசிலம்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ. வும் ஒன்றிய செயலாளருமான பா.நீதிபதி, மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் துரை தனராஜ், மாநில இளம் பெண்கள் பாசறை துணைச்செயலாளர் இளஞ்செழியன், நகரசெயலாளர் பூமாராஜா மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.