
காமராஜர் பிறந்த தினம்.
சோழவந்தான்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் கலைவாணி மெட்ரிக் பள்ளியில், தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளர், கவுன்சிலர் டாக்டர் எம். மருதுபாண்டியர் தலைமை வகித்தார்.
தொழிலதிபர் எம். மணி, கவுன்சிலர் எம். வள்ளி மயில் பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பல்வேறு மாறுவேடம் போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளை , பள்ளி நிர்வாகம் செய்திருந்தது.






