
நிலக்கோட்டையில் விவேகானந்தர் நினைவு 123 தின விழா
நிலக்கோட்டை, ஜூலை. 4-
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஸ்டுடென்ட் டுடோரியல் கல்லூரி மாணவ மாணவிகள் சார்பாகவும், நிலக்கோட்டை பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு நிர்வாகிகள் சார்பாகவும் விவேகானந்தரின் 123 வது நினைவு தினத்தை முன்னிட்டு திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து சகோதரத்துவத்தையும் உலகிற்கு அறிமுகம் செய்த ஆன்மீக கருத்துக்களை உலகறிவிய செய்ததை நினைவு கூறும் விதமாக தற்போது அமைதி மார்க்கம் உலகம் முழுக்க ஏற்பட வேண்டும் என்று அவரது நினைவு தினத்தன்று மாணவ மாணவிகள் கூட்டமைப்பினர் வணங்கி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை ஸ்டுடென்ட் டுடோரியல் கல்லூரி முதல்வர் இளங்கோ, பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு விவசாய அணி மாநிலத் தலைவர் சிங்கராஜ், ராமராஜபுரம் கிளை தலைவி முத்தீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.