
ஓரணியில் தமிழ்நாடு, கம்பத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கை
“ஓரணியில் தமிழ்நாடு” திமுக உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல்
தேனி தெற்கு மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன் வீட்டிலிருந்து தொடங்கியது

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. அடுத்த தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் வகையில் திமுக பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில், வாக்குச்சாவடிதோறும் 30 சதவீதம் வாக்காளர்களை திமுக உறுப்பினர்களாக்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் அறிவித்தார்.
இதையடுத்து, இந்த உறுப்பினர் சேர்க்கை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று முன் தினம் சென்னையில் தொடங்கி வைத்தார். இதற்காக, திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் தொகுதிக்கு ஒருவர் என 234 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதுடன், உறுப்பினர் பதிவுக்கென தனி செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் கம்பத்தில் ஓரணியில் தமிழ்நாடு எனும் முன்னெடுப்பில், தேனி தெற்கு மாவட்ட செயலாளர் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் கம்பம் நா.இராமகிருஷ்ணன் அவர்களும் அவரது குடும்பமும் தங்களை கழத்தில் புதுப்பித்துக் கொண்டனர். இதையடுத்து கம்பம் வடக்கு நகர செயலாளர் எம்.சி வீரபாண்டியன் அவர்களது குடும்பமும், தெற்கு நகரச் செயலாளர் சி.பால்பாண்டி அவர்களது குடும்பமும் தங்களை கழத்தில் புதுப்பித்துக் கொண்டனர்.
நிகழ்வினை கம்பம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் வி.ஜெயன் துவக்கி வைத்தார், கம்பம் சட்டமன்றத் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி பார்வையாளர் திலீபன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் குரு குமரன் மற்றும் வடக்கு, தெற்கு நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .






