
சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் பதவி இழப்பு. நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் திமுகவின் உமா மகேஸ்வரி தோல்வி
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில்:
திமுக தலைமையிலான சங்கரன்கோவில் நகராட்சியில் முக்கிய அரசியல் மாற்றம் நேற்று இடம் பெற்றது. நகராட்சி சேர்மன் பதவியில் இருந்த திரு.உமா மகேஸ்வரி அவர்கள், நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மூலம் தனது பதவியை இழந்தார்.
மொத்தம் 30 கவுன்சிலர்கள் உள்ள நிலையில், 28 பேரும் நம்பிக்கை இல்லாத தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்த வாக்கெடுப்பின் மூலம் சேர்மன் பதவியில் இருந்து உமா மகேஸ்வரி விலக்கப்பட்டார். இதனால் நகராட்சி நிர்வாகத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் கடந்த சில வாரங்களாகவே உள்ளக அரசியல் பரபரப்புகளுக்கு பின்னணியாகும். நகராட்சியின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத் திட்டங்களைச் சுற்றி ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் கவுன்சிலர்கள் பெரும்பான்மையாக உறுப்பினர்களின் ஆதரவை இழந்ததாக தெரிகிறது.
திமுக அமைப்பிலும், நகராட்சியின் எதிர்கால நிர்வாகத்திலும் இது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சேர்மனை தேர்ந்தெடுக்கும் பணிகள் விரைவில் நடைபெறும் என மாவட்ட நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன…