March 3, 2026
புதிய மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்பு

புதிய மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்பு

மதுரை:

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவராக கே.ஜே.பிரவீன் குமார், பொறுப்பேற்றுக் கொண்டார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (25.06.2025) மதுரை மாவட்ட ஆட்சித்தலைவராக கே.ஜே.பிரவீன் குமார், பொறுப்பேற்றுக் கொண்டார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், வகித்துள்ள பொறுப்புகள் விபரம்:-
மதுரை மாவட்ட ஆட்சித்தலைவராக இன்றைய தினம் பொறுப் பேற்றுக்கொண்ட கே.ஜே.பிரவீன் குமார், கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தை சேர்ந்தவர். 2017-ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்தார்.

அதனைத் தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில் உதவி / பயிற்சி ஆட்சியராகவும், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் சார் ஆட்சியராகவும், இராமநாதபுரம் மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியராகவும் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை), மதுரை மாநகராட்சியில் ஆணையராகவும், பெருநகர சென்னை மாநகராட்சியில் வட்டார துணை ஆணையராகவும் பதவி வகித்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவராக கே.ஜே.பிரவீன் குமார், பொறுப்பேற்றுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *