March 3, 2026
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்ப்பாட்டம்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்ப்பாட்டம்.

நத்தம்.

திண்டுக்கல் மாவட்டத்தில், அதிமுக கழக சார்பில் விவசாயிகள் துயர் துடைக்க மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பேருந்து நிலையம் அருகில் , வெள்ளிக்கிழமை காலை 9:30 மணிக்கு தென் மாவட்ட ‘மா’ பயிரிடும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமல், விவசாயிகளின் துயரத்தை துச்சமென நினைக்கும் திமுக ஆட்சியாளர்களைக் கண்டித்து, ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்டக் கழகங்களின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கழக பொருளாளர் மேற்கு மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில், கழக துணை பொதுச் செயலாளர், கிழக்கு மாவட்ட செயலாளர் , முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், கழக அமைப்பு செயலாளர், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர், திண்டுக்கல் மாநகராட்சி முன்னாள் மேயர் மருதராஜ், கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம், நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தேன்மொழி எம்.எல்.ஏ. கழக அம்மா பேரவை மாநில இணை செயலாளர் நத்தம் முன்னாள் பெருந்தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், மற்றும்
கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், திண்டுக்கல் மேற்கு கிழக்கு மாவட்டங்களின் பல்வேறு நிலைகளில் உள்ள பொறுப்பாளர்கள் , கழக அனைத்து பிரிவு நிர்வாகிகளும் பொதுமக்களும் விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *