
இராமநாதபுரம் தி.மு.க மாவட்ட கழக செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் கமுதியில் புதிய மினிபேருந்து சேவை
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் மற்றும் கழக இளைஞர் அணி செயலாளர் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலோடு இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் திரு காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் அவர்கள் கமுதி பேருந்து நிலையத்தில் இருந்து நெடுங்குளம் வழியாக மணக்குளம் வரை புதிதாக இயக்கப்பட்டுள்ள புதிய மினிபேருந்து சேவையினை துவங்கி வைத்து இன்று பயணிக்கும் அனைவரின் பயண சீட்டு தொகையினையும் வழங்கினார்.
உடன் கமுதி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வாசுதேவன் அவர்களும் மக்களின் தேவை அறிந்து தகுந்த நேரத்தில் புதிய பேருந்தை தொடங்கி வைத்த இந்த மகத்தான நிகழ்வில் ஒன்றிய,நகர் கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.






