
மதுரையில் ரூ.985 லட்சம் மதிப்பீட்டில் 59 புதிய தார்சாலை பணிகள்
மதுரை.
”ரூ.985 லட்சம் மதிப்பீட்டில் 59 புதிய தார்சாலை பணிகள்”
தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.

மதுரை மாநகராட்சி மத்திய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மண்டலம் 3 வார்டு எண்.50, 55, 56, 58, 59, 60, 61, 75 மற்றும் 77 ஆகிய வார்டு பகுதிகளில் புதிய தார்ச்சாலைகள் அமைப்பதற்கான பூமி பூஜை தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் , மதிப்பிற்குரிய மேயர் இந்திராணி பொன்வசந்த் , மாநகராட்சி ஆணையாளர்
சித்ரா விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு எண்.50 ஆதிமூலம் பிள்ளை அக்ரஹாரம் தெருவில் புதிய தார் சாலைகள் ரூ.62 லட்சம் மதிப்பீட்டிலும், வார்டு எண்.55 ராஜாமில் காம்பவுண்டு நடுத்தெருவில் புதிய தார் சாலைகள் ரூ.155 லட்சம் மதிப்பீட்டிலும், வார்டு எண்.58 மேலப்பொன்னகரம் மெயின் ரோடு பகுதியில் புதிய தார் சாலைகள் ரூ.103.80 லட்சம் மதிப்பீட்டிலும், வார்டு எண்.56 புது ஜெயில் மெயின் ரோடு பகுதியில் புதிய தார் சாலைகள் ரூ.308 லட்சம் மதிப்பீட்டிலும், வார்டு எண்.61 எப்.2 காவல் நிலையம் தாமஸ் காலனி பகுதியில் புதிய தார் சாலைகள் ரூ.78.53 லட்சம் மதிப்பீட்டிலும், வார்டு எண்.59 அம்பேத்கர் காலனி மற்றும் வார்டு எண்.60 ஆர்.ஹெச்ஃடுவின் டைப் 1வது மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் புதிய தார் சாலைகள் ரூ.102 லட்சம் மதிப்பீட்டிலும், வார்டு எண்.77 சுப்பிரமணியபுரம் 1வது மெயின் தெருவில் புதிய தார் சாலைகள் ரூ.119 லட்சம் மதிப்பீட்டிலும், வார்டு எண்.75 லெட்சுமிபுரம் எல்.எல்.ரோடு பகுதியில் புதிய தார் சாலைகள் ரூ.57 லட்சம் மதிப்பீட்டிலும் என, மொத்தம் 59 சாலைகள் 11 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.985 லட்சம் மதிப்பீட்டில் சாலை பணிகள் அமைப்பதற்கு பூமி பூஜையிட்டு பணிகளை,
அமைச்சர் தொடங்கி வைத்தார்கள்.
இந்த சாலைப்பணிகளை உரிய காலத்திற்குள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்கள்.
இந்நிகழ்வில், துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் பாண்டிச் செல்வி, உதவி ஆணையாளர் பிரபாகரன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி செயற்பொறியாளர் முத்து, மாமன்ற உறுப்பினர்கள் இந்திராகாந்தி, விஜயா, ஜெயராம், ஜென்னியம்மாள், மகாலெட்சுமி, பாமாமுருகன், செல்வி, ராஜ்பிரதாபன், உதவிப் பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






