
பழனி அருகே கீரனூரில் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு த வெ க மகளிர் அணி சார்பாக மருத்துவ முகாம் நடைபெற்றது
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழக வெற்றி கழகம் திண்டுக்கல் மேற்கு மாவட்டம் மகளிர் அணி தலைமை சார்பாக கழகத் தலைவர் தளபதியார் அவர்களின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு கீரனூர் சன்மார்க்க குருகுலத்தில் ஆதரவற்ற முதியோர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் மற்றும் இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட செயலாலர் S.கார்த்திக் ராஜன் அவர்களின் தலைமையில் மகளிரணி அமைப்பாளர் ஜெயலக்ஷ்மி மற்றும் பழனி இரத்த வங்கி அலுவலர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது சன்மார்க்க குருகுலத்தில் உள்ள முதியோர்களுக்கு இலவச ரத்த பரிசோதனை , சுகர், பிரசர், ஆகிய அனைத்து வியாதிகளுக்கும் மருத்துவம் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு பாலன், தொப்பம்பட்டி ஒன்றிய செயலாளர் L.M.A. ஜின்னா பழனி நகர செயலாளர் மிதுன் மனோகரன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பழனி செய்தியாளர் நா.ராஜாமணி.