March 2, 2026
பாஜகவில் நேர்மையும், தூய்மையான அரசியலும் இருப்பதால் இணைகிறேன் -ராமநாதபுரம் இளைய மன்னர் ஆதித்யா சேதுபதி:

பாஜகவில் நேர்மையும், தூய்மையான அரசியலும் இருப்பதால் இணைகிறேன் -ராமநாதபுரம் இளைய மன்னர் ஆதித்யா சேதுபதி:

மதுரை:

மதுரை வளையங்
குளத்தில்ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் ஆதித்யா சேதுபதி முன்னிலையில் ,
5000 பேர் பாஜகவில் இணையும் விழா – பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை பங்கேற்றனர்.

இளைஞர்கள் இணைவதால் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் வரும் – மதுரை கோட்ட பாஜக பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் பேட்டி அளித்தார்.
மதுரை சுற்றுச்சாலை அருகே உள்ள வலையங்குளம் பகுதியில் நாளை பாஜக சார்பில் நடைபெறும் ராமநாதபுரம் சமஸ்தானம் இளைய மன்னர் ஆதித்யா சேதுபதி ராஜா தலைமையில் பல்வேறு கட்சிகளில் இருந்து 5000 இளைஞர்கள் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடை பெறுகிறது.

மதுரை வளையங்குளம் தனியார் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில்,
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்,முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

இது தொடர்பாக, செய்தியாளர்களை சந்தித்த மதுரை கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் இளைஞர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

அதனடிப்படையில், நாளை நடைபெறும் பாஜக நிகழ்ச்சியில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த இளைஞர்கள் 5000 பேர் ராமநாதபுரம் சமஸ்தானம் இளைய மன்னர் ஆதித்யா சேதுபதி தலைமையில் பாஜகவில் இணைகிறார்கள்.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் பங்கேற்கிறார்கள். இதன் மூலம் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும்.
இதன் மூலம் தமிழகத்தில் ஆன்மிக ஆட்சி நடைபெற வேண்டும் என்ற எண்ணம் இளைஞர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

மதுரையில் தொடர்ந்து, திமுக அதிமுக கட்சிகள் தங்கள் கட்சி நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.
இதேபோல், பாஜகவும் தனியே நிகழ்ச்சியை நடத்துவதற்கு தென் மாவட்ட மக்களை கவர்வதற்காக வா என கேள்வி எழுப்பியதற்கு?

தென்மாவட்ட மக்களை மட்டும் கவர்வது நோக்கமல்ல மதுரையில் எந்த ஒரு நிகழ்ச்சி தொடங்கினாலும் வெற்றி பெறும். அதன் காரணமாகவே மதுரையில் பாஜக ஆலோசுனை கூட்டம் நடத்தினோம்.

தென் மாவட்டத்தில் 10 பாராளுமன்ற தேர்தலில் 5 தொகுதிகளில் இரண்டாவது இடம் பிடித்தோம் . அதன் மூலமாக தமிழகத்தில் அடுத்து வரக்கூடிய தேர்தல்களில் வெற்றி பெற உழைத்து வருகிறோம் என்றார்.

ஜூன் 22 முருகன் மாநாடு அரசியல் ரீதியாக நடத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு?
தமிழ்மொழியும் பக்தியும் ஒன்றாக உள்ளது. மக்களிடையே ஒரு ஒற்றுமையை உண்டாக்குவதற்காகவே முருகன் மாநாடு நடத்தப்படுகிறது.

இந்து அமைப்புகள் சார்பில் நடத்தப்படும் இந்த மாநாட்டில் மற்றவர்களைப் போலவே பாஜகவும் கலந்து கொள்கிறது. இந்துத்துவா கொள்கைகளை பரப்பும் விதமாகவே இந்த மாநாடு நடத்தப்படுவதாகவும் வேறு எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என கதலியி நரசிங்க பெருமாள் தெரிவித்தார்.

தொடர்ந்து, பாஜகவில் இணையும் நோக்கம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு அரசியலில் நேர்மையும் தூய்மையும்இருக்க வேண்டும் என்பதால் பொது சேவையில் இருந்த நான் பாஜகவில் நேர்மையும் தூய்மையான அரசியலும் இருப்பதால் இணைகிறேன் என, ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் ஆதித்யாசேதுபதி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *