
இலவச நோட் புத்தகம் வழங்கும் விழா
சோழவந்தான்:
மதுரை சோழவந்தான் அருகே , திருவாலவாயநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்
பள்ளியில், இலவச நோட்புக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .
சோழவந்தான் அருகே, வாடிப்பட்டி ஊராட்சி திருவால வாயநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் , விஜயலட்சுமி அறக்கட்டளை சார்பில் இலவச நோட்புக் எழுதுபொருள் ஸ்கூல் பேக் உள்ளிட்ட பொருட்கள் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் அழகசுந்தரம் தலைமை தாங்கினார் . முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சகுபர் சாதிக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நோட்புக் எழுது பொருட்களை வழங்கினார் .
பள்ளி ஆசிரியை ஆசிரியர் பெருமக்கள் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, பள்ளிக்கு இரண்டு மின்விசிறிகளும் வழங்கப்பட்டது.






