
"திமுக ஆட்சியை அப்புறப்படுத்துவதே முதன்மை லட்சியம்"-தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
“தமிழகத்தின் உரிமைகளையும், கூட்டாட்சி தத்துவத்தையும், மொழி, கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பாதுகாப்பதே லட்சியம்”-திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு. க. ஸ்டாலின் எது வலியது… எது மக்களின் ஆழ் மனதில் பதியக்கூடியது?
பாஜகவின் முன்னது எதிர்மறை… திமுகவின் பின்னது நேர்மறை…
பாஜகவின் முன்னது சுயநலம் கலந்த அரசியல் திமுகவின் பின்னது தமிழக பொதுநலம் கலந்த அரசியல் லட்சியங்களை பின்பற்றுவதாக நடித்தாலும் மக்களுக்கு அது நடிப்பாக தெரிய கூடாது.
லட்சியங்களை உண்மையாக பின்பற்றினாலும் அது தமிழக மக்களுக்கு விரோதமாக தெரிய கூடாது முன்னதில் திமுக வெற்றி கண்டுள்ளது பின்னதில் பாஜக தமிழகத்தில் தோல்வி கண்டுள்ளது.
திமுகவின் நேர்மறை அரசியல் சித்தாந்தங்களை மக்களிடையே கொண்டு போய் சேர்ப்பதில் மு. க. ஸ்டாலின், ஆ. ராசா, திருச்சி சிவா, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் போன்றோர் முன்னணியில் உள்ளனர். அப்பாவு பின்தங்கிய நிலையில் உள்ளார் பாஜக சித்தாந்தங்களை மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் அண்ணாமலை, பேராசிரியர் ராம சீனிவாசன், எச். ராஜா ஆகியோர் தமிழக மக்கள் மனதில் முன்னணியில் உள்ளனர்.






