March 5, 2026
வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.17 லட்சத்திற்கு தேங்காய் ஏலம் நடந்தது.

வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.17 லட்சத்திற்கு தேங்காய் ஏலம் நடந்தது.

வாடிப்பட்டி, ஜூன்.11-
மதுரை மாவட்ட விற்பனைக் குழு சார்பாக வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் மதுரை விற்பனை குழு செயலாளர் அம்சவேணி தலைமையில் நடந்தது. இந்த ஏலத்தில் 19விவசாயிகளின் 68220 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டது இதில் 12 வியாபாரிகள் பங்கு பெற்றனர். இந்த ஏலத்தில் அதிகபட்சமாக விலையாக ரூ.33.50க்கும்குறைந்த பட்சமாக ரூ.14.40க்கும் சராசரியாக ரூ.22.00க்கும் ஏலம் போனது.

இதனால் ரூ.1510521 மட்டையுடன் கூடியதேங்காய் வர்த்தகம் நடந்தது.மேலும் 19 விவசாயிகளின் 1311கிலோ கொப்பரை தேங்காய் ஏலம் விடப்பட்டது. இதில் 6 வியாபா ரிகள் பங்கேற்று அதிக பட்சமாக ரூ.228.00குறைந்தபட்சமாக ரூ.148.00க்கு சராசரியாகரூ.201.00ஏலம் போனது. இதனால் ரூ.263761கொப்பரை தேங்காய் வர்த்தகம் நடந்தது. ஆக மொத்தம் ரூ.1774282மேலும் விவரங்களுக்கு வாடிப்பட்டி ஒழுங்குமுறைவிற்பனை கூட மேற்பார்வையாளர் (பொறுப்பு) நாக மூர்த்தி யை தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *