
பௌர்ணமி விளக்கு பூஜை
வாடிப்பட்டி, ஜூன்.11-
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் குட்லாடம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அஞ்சு குழி கண்மாய் சாலையில் அருள்மிகு லலிதாம்பிகேஸ்வரர் உடனுறை லலிதாம்பிகேஸ்வரி ஆலயத்தில் பௌர்ணமி விளக்கு பூஜை நடந்தது.

இந்த பூஜையை முன்னிட்டு லிங்கேஸ்வரர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை அர்ச்சனைகள் செய்து திருநீர் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பெண்களுக்கு கலந்துகொண்டு திருவிளக்கு ஏற்றி வழிபாட்டு பாடல்கள் பாடினர். இதன் பூஜை மற்றும் ஏற்பாடுகளை அருணாச்சல பாண்டியன் செய்திருந்தார்.






