
குடிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்க கோரிக்கை.
புதுச்சேரி ஜூன் 10
புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பல இடங்களில் குடிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்ட நிலையில் நேத்தாஜி நகரில் மிகவும் குறைந்த அளவில் மட்டுமே குடிநீர் வருவதாகவும் வேகமாக வருவதில்லை என்று புகார் வந்த நிலையில் அதற்கான காரணம் என்னவென்று ஆராய்ந்ததில் தண்ணீர் குழாய்கள் 150 மீட்டர் அளவு வரை குழாய்கள் பழுதடைந்து இருப்பதை சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் கண்டறிந்தார்..
உடனடியாக பொதுப்பணித்துறை குடிநீர் அலுவலகம் சென்று செயற்பொறியாளர் அன்பரசு அவர்களை இளநிலைப் பொறியாளர் வெங்கடேசன் அவர்களையும் சந்தித்து பழுதான குடிநீர் குழாய்களை சரிசெய்து தரும்படி சட்டமன்ற உறுப்பினர் கேட்டுக் கொண்டார்.அதற்கு அதிகாரிகள் உடனடியாக சரி செய்து தருவதாக கூறினார்கள்.
மேலும் வாணரப்பேட்டை முருகசாமி தோப்பு காளியம்மன் தோப்பு ஆகியப் பகுதிகளில் உள்ள குடிநீர் குழாய் பிரச்சனைகளை தீர்க்குமாறு சட்டமன்ற உறுப்பினர் கேட்டுக் கொண்டார் .அதற்கு அதிகாரிகள் சாலை அமைக்கும் பணியின் போது தண்ணீர் குழாய்கள் அனைத்தையும் சரி செய்து தருவதாக அதிகாரிகள் தெரிவித்தார்கள். மேலும் உடையார் தோட்டம் பிரான்சுவா தோப்பு பகுதிகளில் குடிநீர் பிரச்சனை தீர்க்க பாதியளவு பணிகள் முடிந்த நிலையில் மீதி பணிகளையும் விரைவில் முடித்து தருமாறு சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.
அந்தப் பணிகளையும் விரைந்து முடித்துத் தருவதாக அதிகாரிகள் கூறினார்கள்.மேலும் சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் (ஆரோ வாட்டர்) அமைத்த இடங்களில் குடிநீர் சுவை சரியில்லை என்பதை அதிகாரிகளிடம் தெரிவித்தார். அதனை மீண்டும் ரூபாய் 38 லட்சம் செலவில் மறு சீரமைப்பு செய்து தரமான குடிநீர் விநியோகம் செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தார்கள். மேலும் புதியதாக ஆட்டுப்பட்டியில் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையம் விரைந்து முடித்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.அதற்கு இன்னும் இரண்டு மாதத்தில் பணிகள் முடிந்து விடும் என்று அதிகாரிகள் கூறினார்கள் .
மேலும் வம்பாகீரப்பாளையம் பகுதியிலும் சுத்திகரிப்பு நிலையம் அமைத்திட நடைபெறும் பணிகளையும் சட்டமன்ற உறுப்பினர் கேட்டறிந்தார்.மேலும் வாணரப்பேட்டை இந்திரா நகர் பகுதியில் சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் அமைத்தால் அப்பகுதியை சார்ந்த மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதையும் சட்டமன்ற உறுப்பினர் அதிகாரிகளிடம் கூறினார். அதற்கு அதிகாரிகள் இடம் தேர்வு செய்து தந்தால் சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் அமைத்து தருவதாக உறுதி அளித்தார்கள்.
.அதற்கு சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் எவ்வளவு விரைவில் பணிகளை முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக குடிநீர் பிரச்சனைகளை முடித்துத் தரும்படி கேட்டுக்கொண்டார்.அவருடன் தொகுதி செயலாளர் சக்திவேல், ஆதிதிராவிட துணை அமைப்பாளர் தங்கவேல், கிளை செயலாளர்கள் செல்வம், இருதயராஜ், ஆகியோர் உடனிருந்தார்கள்.






