March 2, 2026
வாடிப்பட்டி பாலதண்டாயுதபாணி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.

வாடிப்பட்டி பாலதண்டாயுதபாணி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.

வாடிப்பட்டி, ஜூன்:10.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டை தர்மராஜன் கோட்டையில் இயற்கை எழில் சூழ்ந்த சிறுமலை அடிவாரத்தில் கோம்பை கரட்டில் எழுந்தருளியுள்ள பாலதண்டாயு தபாணி திருக்கோயில் வைகாசி விசாகத் திருவிழா கடந்த 26ந்தேதி
கொடியேற்றத்துடன்தொடங்கியது.

இதன் முக்கிய திருவிழா நேற்று 9ந் தேதி திங்கள்கிழமை வைகாசி விசாகத்தையொட்டி அதிகாலை 4 மணி முதல் மாலை 2 மணி வரை தாதம்பட்டி, நீரேத்தான், போடிநாயக் கன்பட்டி, குலசேகரன் கேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்து வாடிப்பட்டி மௌன குருசாமி மடத்திலிருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து அழகு குத்தி, பூக்குழி இறங்கி 3 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரையாக சென்று பாலதண்டாயுபாணி கோவிலில் உற்சவர் பாலதண்டாயுதபாணிக்கு பாலபிஷேகம் செய்தனர். மூலவர் சந்தன காப்பில் ராஜ அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

இதில் கோவில் செல்லும் சாலையில் வழி முழுவதும் பந்தல் அமைத்து உபயதாரர்கள நீர் மோரும், அ.தி.மு.க., தே.மு.தி.கட்சியினர் மற்றும் தர்மராஜன் உள்ளிட்ட பல்வேறு சங்கம், அமைப்பினர் அன்னதானங்கள் வழங்கினார்கள்.

10ந் தேதி செவ்வாய்கிழமை மாலை 6 மணிக்கு பாலதண்டாயுதபாணி கோயிலில் இருந்துபட்டு பல்லக்கில் சுவாமி புறப்பாடு , 11ந்தேதி புதன்கிழமை நள்ளிரவு 1 மணிக்கு மல்லிகை மலர்கள் மற்றும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் பாலதண்டாயுத பாணி எழுந்தருளி முக்கிய வீதிகளில் உலா சென்று ஏராளமான திருக்கண்களில் விடிய விடிய பக்தர்களுக்கு அருள் பாலித்து மறுநாள் மதியம் 2 மணிக்கு கோயிலை சென்ற டைவார்.

அந்த 3 நாட்களும் இரவு நேரங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதன் ஏற்பாடுகளை சொக்கையாசாமி பேரப்பிள்ளை கள், சீர்பாதம் தங்கிகள், வாடிப்பட்டி கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *