March 2, 2026
மேல்மங்கலத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை ஊரக வளர்ச்சி துறை ஆணையர் ஆய்வு

பெரியகுளம் மே.15

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேல்மங்கலம் வராக நதி ஆற்றின் குறுக்கே நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 4 கோடியே 54 இலட்சம் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகள் கேஎம்சி அசோசியேஷன் மூலம் நடைபெற்று முடிந்தது.

அதனை ஊரக வளர்ச்சி துறை ஆணையர் பொன்னையா தலைமையில் குழுவினர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து மேல்மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15-வது மத்திய நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூபாய் 1 கோடியே 26 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கூடுதல் கட்டிடம் கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தார்.

உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அபிதா ஹனிப், செயற்பொறியாளர் சுந்தரேசன், உதவி செயற்பொறியாளர்கள் பூம்பாண்டியன், ஶ்ரீ வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மலர்விழி, பாலகிருஷ்ணன், உதவி பொறியாளர் அஜய்குமார் பலர் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *